இந்தியா

44% இந்தியர்கள்தான் முகக்கவசம் அணிகிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி

4th May 2021 11:21 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் திணறி வருகின்றன.

இந்த பேரிடருக்கு மத்தியில், சாமானிய மக்களைக் காக்கும் உயிர்க்கவசம் என்றால் அது முகக்கவசம்தான். கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டுக் கழுவுவது, சமூக இடைவெளியைக் காட்டிலும் முகக்கவம், கரோனா தொற்றிலிருந்து நம்மைக் காக்கும் உயிர்க்கவசமாக விளங்கி வருகிறது.

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் கூட, இந்தியாவில் முகக்கவம் என்பது ஏதோ முகத்தாவடையை பாதுகாக்கும் கவசமாகவே பலராலும் அணியப்பட்டு வருகிறது. தவறாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல, அதனை அப்படியே திறந்தவெளியில் தூக்கிப்போட்டு, சமுதாயத்துக்கும் கேடு விளைவிக்கிறார்கள்.

ஏக் தேஷ் என்ற அமைப்பால் நடத்தப்பட்ட அப்னா மாஸ்க் என்ற ஆய்வில், நாட்டிலுள்ள 90 சதவீத மக்களுக்கு, கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால், எத்தனையே அச்சுறுத்தல்களையும் தாண்டி 44 சதவீத இந்தியர்கள்தான் முகக்கவசத்தை அணிந்திருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், வீட்டிலிருந்து வெளியே வந்து வீடு திரும்பும் வரை நாங்கள் முகக்கவசம் அணிந்திருப்போம் என்று 50 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ஆனால், யாராவது அருகில் இருந்து பேசும்போது மட்டுமே முகக்கவசம் அணிவோம் என்கிறார்கள் 30 சதவீதம் பேர்.

இந்த புள்ளி விவரங்கள் நிச்சயம் கலக்கத்தையே ஏற்படுத்துகிறது. வீட்டிலிருக்கும் போதே முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், முகக்கவசத்தின் அவசியத்தை மக்கள் இன்னமும் உணராத நிலை பெருங்கவலையை ஏற்படுத்துகிறது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தற்பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு சிகிச்சை அளிப்பதில் இருக்கும் பல்வேறு சிக்கல்கள் ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள மூக்கு மற்றும் வாயை மூடும் முகக்கவசத்தை அணிவதில் மக்களுக்கு என்ன பெரிய சிரமம் இருந்துவிடப் போகிறது என்பதுதான் சுகாதாரத் துறையினருக்கு ஏற்படும் மிகப்பெரிய கேள்வி.

 

Tags : coronavirus facemask vaccine indians
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT