இந்தியா

அசாமில் புதிய கரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு

4th May 2021 07:19 PM

ADVERTISEMENT

அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக அசாமில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகளையும் மூட மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மாநிலத்தில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து விதமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மாநில அரசின் புதிய கட்டுப்பாடுகள் மே 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus COVID19 Assam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT