இந்தியா

கேரளத்தில் புதிதாக 37190 பேருக்கு கரோனா தொற்று

4th May 2021 05:57 PM

ADVERTISEMENT

கேரளத்தில் புதிதாக 37,190 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். 

அதன்படி, மாநிலத்தில் புதிதாக 37,190 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 57 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,508 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று மேலும் 26,148 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 13,39,257 பேர் குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Kerala coronavirus Covid19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT