இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு

4th May 2021 11:23 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்று குறையாததால், 4 மாவட்டங்களில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட முழு முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, புத்காம் ஆகிய மாவட்டங்களில் மே 6-ம் தேதி வரை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரிலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

ADVERTISEMENT

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Tags : jammu-kashmir coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT