இந்தியா

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் காலமானார்

4th May 2021 04:36 PM

ADVERTISEMENT

உடல்நலக்குறைவு காரணமாக ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் காலமானார். 
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன்(94). இவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “ஜக்மோகன் மறைவு நமது நாட்டுக்கு பேரிழப்பாகும். அவர் மிகச் சிறந்த நிர்வாகியும், பேரறிஞருமாவார். அவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக எப்பொழுதும் பாடுபட்டு வந்தார். 
அவர் நிர்வாகத்தில் இருந்தபோது புதுமையான கொள்கை முடிவுகளை மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
மறைந்த ஜக்மோகன் இரண்டு முறை ஜம்மு காஷ்மீர் ஆளுநராகவும், 1996ஆம் ஆண்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

Tags : jagmohan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT