இந்தியா

ஹைதராபாத்: நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா

4th May 2021 06:18 PM

ADVERTISEMENT

நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 12 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஏப்ரல் 24ஆம் தேதி பரிசோதக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 
பரிசோதனை முடிவில் இன்று சிங்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவித்துள்து. இதையடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட சிங்கங்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 
ஏற்கெனவே நியூயார்க், ஹாங்காங்கில் விலங்குகளிடம் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவிலும் முதல் முறையாக விலங்குகளிடம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : lion coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT