இந்தியா

கரோனா கட்டுப்பாடுகள்: நாட்டில் வேலையிழப்பு விகிதம் அதிகரிப்பு

4th May 2021 03:23 PM

ADVERTISEMENT

கரோனா அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் வேலையிழந்தோர் விகிதம் அதிகரித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் அளித்துள்ள தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேலையிழந்தோர் விகிதம் 7.97 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நகர்புறப் பகுதிகளில் அதிக அளவாக 9.87 சதவிகிதத்தினரும், கிராமப் புறங்களில் 7.13 சதவிகிதத்தினரும் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 

தேசிய வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதம் 6.50 சதவிகிதமாக இருந்ததாகவும், அப்போது நகரம் மற்றும் கிராமப் புற பகுதிகளிலும் வேலையிழப்பு விகிதமும் குறைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், பல்வேறு மாநிலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதில் பலர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

எனினும் இது முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை விட மோசமான நிலையை அடையவில்லை. முதலில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கில் வேலையிழந்தோர் விகிதம் 24 சதவிகிதமாக இருந்தது. 

தற்போது நாட்டில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். 

கரோனா அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும், ஊரடங்கு பிறப்பிப்பதை இறுதி ஆயுதமாக உபயோகிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Tags : unemployment coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT