இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்

4th May 2021 11:36 AM

ADVERTISEMENT

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 150 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் கடைகளுக்கு அருகே செல்லும் மின்வையரில் மின் கசிவு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள 7 கடைகளுக்கு தீ மளமளவெனப் பரவியது. 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடைபெற்ற நேரத்தில் கடைகளில் யாரும் இல்லாததால், ‘உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 

ADVERTISEMENT

மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Tags : Tirumala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT