இந்தியா

தில்லி வந்தடைந்த 2-வது 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்'

4th May 2021 10:47 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்திலிருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் தில்லி வந்தடைந்தது.

தில்லிக்கு ரயில் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு வருவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 70 டன் ஆக்ஸிஜன் ரயில் மூலம் தில்லிக்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது மேற்கு வங்கத்தின் துர்காபூர் பகுதியிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் அனுப்பப்பட்ட 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தில்லி ஒஹிலா பகுதியை வந்தடைந்தது.

ADVERTISEMENT

தில்லியின் பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் பிரித்து அனுப்பப்படவுள்ளது. 

Tags : coronavirus oxygen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT