இந்தியா

ஆந்திரத்தில் பகுதி நேர ஊரடங்கு அறிவிப்பு 

3rd May 2021 03:39 PM

ADVERTISEMENT

 

தீவிரமாகப் பரவிவரும் கரோனா பரவல் காரணமாக ஆந்திரத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பகுதிநேர ஊரடங்கு அறிவித்து அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

நாட்டில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பல மாநிலத்தில் ஊரடங்கு அறிவித்து வருகின்றது. 

அதன்படி, ஆந்திர மாநிலத்தில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை, அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

அத்தியாவசிய தேவைகள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு, அமலில் உள்ளது. ஆனாலும் அவசர சேவைகள் மட்டும்  செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Tags : andhra pradesh coronavirus partial curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT