இந்தியா

பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே: ம.பி. முதல்வர்

3rd May 2021 05:17 PM

ADVERTISEMENT

கரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்கள் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் அறிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநிலத்தில் கரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போட இயலவில்லை

இது தொடர்பாக மத்திய அரசு, சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தொடர்புகொண்டோம். எனினும் தற்போதைய சூழலில் கரோனா தடுப்பூசி வழங்க இயலாது என்று அவர்கள் தெரிவித்ததாகக் கூறினார். 

மத்தியப் பிரதேசத்தில் புதிதாக 12,662 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 5,75,706-ஆக அதிகரித்துள்ளது. அப்போது பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்கள்தான் என்று அவர் அறிவித்தார்.

ADVERTISEMENT

இதற்கு முன்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளனர்.

Tags : Journalists madhya pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT