இந்தியா

கரோனா: ரூ.510 கோடி மதிப்புள்ள மருந்துகளை வழங்கியது பைசர்

3rd May 2021 03:29 PM

ADVERTISEMENT


இந்தியாவிற்கு உதவும் வகையில் ரூ.510 கோடி மதிப்புள்ள கரோனா மருந்துகளை பைசர் நிறுவனம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம், இந்தியாவில் பரவி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் இந்த உதவியை செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ''இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவது வருத்தத்தை அளிக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட இந்திய மக்கள் அனைவருக்காகவும் இதனைச் செய்கிறோம்'' என்று கூறினார். 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 3,689 போ் பலியாகினா். இதனால் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 2.15 லட்சமாக உயா்ந்துள்ளது. 

ADVERTISEMENT

கரோனாவுக்கு ஒரே நாளில் 3.92 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் சோ்த்து ஒட்டுமொத்தமாக 1.95 கோடி போ் இதுவரை கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.

Tags : coronavirus Pfizer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT