இந்தியா

சத்தீஸ்கரில் சானிடைசர் குடித்த 2 பேர் பலி

3rd May 2021 12:23 PM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

கோல் பஜார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கரோனா பரவல் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காத நான்கு பேர் சானிடைசரை உட்கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

உடல்நலம் பாதிக்கப்பட்ட நால்வரும், டாக்டர் பி.ஆர் அம்பேக்தர் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர். 

இறந்தவர்கள் ராஜூ சூரா மற்றும் விஜய் குமார் சௌகான் ஆகிய இருவருமே 40 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Tags : சத்தீஸ்கர் sanitiser
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT