இந்தியா

வங்கதேசத்தில் 2 படகுகள் ஒன்றோடொன்று மோதி விபத்து: 26 பேர் பலி

3rd May 2021 01:32 PM

ADVERTISEMENT

 

வங்கதேசத்தில் ஷிப்சார் நகர் அருகே பத்மா நதியில் இன்று காலை இரண்டு படகுகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 26 பேர் பலியாகினர். 

திங்கள்கிழமை காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிவந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

ADVERTISEMENT

படகு அதிவேகமாக சென்றதாலும், ஓட்டுநர் அனுபவமற்ற சிறுவன் என்பதாலும் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல் அதிகாரி ஆஷிகுர் ரஹ்மான் தெரிவித்தார். 

சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags : capsized Bangladesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT