இந்தியா

கர்நாடகம்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கரோனா நோயாளிகள் பலி 

3rd May 2021 03:01 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தின் சாம்ராஜ்நகரில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்கள் மூலமாக பல்வேறு நகரங்களுக்கு மத்திய அரசால் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இருப்பினும் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், சாம்ராஜ்நகரில் திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால், 24 கரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 

Tags : oxygen shortage
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT