இந்தியா

மே - ஜூலையில் 11 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத் துறை

3rd May 2021 04:05 PM

ADVERTISEMENT


மே, ஜூன், ஜூலை மாதங்களில் 11 கோடி தவணை கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வரும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக கடந்த  ஏப்ரல் 28-ம் தேதி ரூ.1,732.50 கோடியை சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு விடுத்துள்ளது.

5 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் பெற ரூ.767.50 கோடி விடுவிக்கப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளுக்கு புதிதாக மத்திய அரசு ஆர்டர் எதுவும் தரவில்லை என பரவும் தகவல் தவறானது என்றும் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus covid 19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT