இந்தியா

மம்தாவுக்கு சரத் பவார் வாழ்த்து!

2nd May 2021 02:29 PM

ADVERTISEMENT


மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்திலுள்ள 292 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு ஆட்சி அமைக்க 147 இடங்களே தேவை என்ற நிலையில், கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் சரத் பவார் சுட்டுரைப் பக்கத்தில் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பவாரின் சுட்டுரைப் பதிவு:

ADVERTISEMENT

"பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மக்கள் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம். பெருந்தொற்றையும் கூட்டாக எதிர்கொள்வோம்."

வாக்கு விகிதத்தின் அடிப்படையில் திரிணமூல் 48.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 37.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT