இந்தியா

வெற்றி எதிரொலி: பாஜக அலுவலகம் முன்பு குவிந்த திரிணமூல் தொண்டர்கள்

2nd May 2021 03:52 PM

ADVERTISEMENT


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பாஜக அலுவலகம் முன்பு குவிந்தனர்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ்  கட்சி 207 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக 87 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

இதனால் உற்சாகமடைந்த திரிணமூல் தொண்டர்கள் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே திரிணமூல் தொண்டர்கள் சிலர் பாஜக அலுவலகம் முன்பு குவிந்தனர். அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT