இந்தியா

விடியோக்களுக்கு வரும் டிஸ்லைக்குகளை மறைக்க யூடியூப் திட்டம்

31st Mar 2021 02:50 PM

ADVERTISEMENT


விடியோக்களை பதிவேற்றும் சமூக வலைத்தளமான யூடியூப், விடியோக்களுக்கு பதிவாகும் டிஸ்லைக்குகளை மறைக்கும் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

விடியோக்களை உருவாக்கி அதனை யூடியூப்பில் பதிவிடுவோருக்கு வரும் டிஸ்லைக்குகளால், மறைமுகமாக நடத்தப்படும் எதிர்மறை தாக்குதல்களிலிருந்து விடியோ உருவாக்குபவர்களைக் காக்க இந்த திட்டத்தை யூடியூப் செயல்படுத்த உள்ளது.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் விடியோ தயாரிப்பாளர்களிடம் கருத்துக் கேட்டுள்ளது யூடியூப்.  அதாவது விடியோ பிடிக்கவில்லை என்ற பதிவை வெளிக்காட்டாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை யூடியூப் பரீட்சித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு விடியோவுக்குப் பதிவாகும் விருப்பம், விரும்பவில்லை என்ற பதிவுகள், விடியோ தயாரிப்பவரின் பக்கத்தில் காட்டும். ஆனால், பொதுமக்கள் பார்வைக்கு விருப்பம் மட்டுமே வைக்கப்படும்.

ADVERTISEMENT

இவ்வாறு விரும்பவில்லை என்ற வாய்ப்பை அனைவருக்கும் மறைத்துவிடப் போவதில்லை என்றும், ஒரு விடியோ சானலைத் தொடங்குபவர்களுக்கு,  ஆரம்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களை கடக்கவே இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்களின் கருத்துகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். அது முக்கியம் கூட. ஆனால், சில படைப்பாளிகளுக்கு விழும் விரும்பவில்லை என்ற பதிவுகளால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவே இந்த முயற்சி என்றும் யூடியூப் கூறியுள்ளது.
 

Tags : video youtube
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT