இந்தியா

கரோனா பரவல்: உ.பி.யில் ஏப்.4 வரை பள்ளிகள் மூட உத்தரவு

31st Mar 2021 11:35 AM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 4 வரை பள்ளிகள் மூடப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிகள் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. 

ADVERTISEMENT

இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மேலும் நான்கு நாள்களுக்குப் பள்ளிகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை இரவு வரை, மேலும் 918 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. 10 பேர் உயிரிழந்தனர். ஒரேநாளில் 446 புதிய வழக்குகளுடன் லக்னோ முதலிடத்தில் உள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்தும் ஊழியர்களுக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். தனியார்த் துறையிலும் இதேபோன்ற ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : UP schools shut Covid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT