இந்தியா

ஸ்ரீநகரில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கரோனாவுக்கு பலி

31st Mar 2021 11:13 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான சுற்றுலாப் பயணி கரோனா பாதித்து மருத்துவமனையில் உயிரிழந்தார். 

மார்ச் 30ம் தேதி புனேவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஸ்ரீநகரின் மார்பு நோய்கள் தொடர்பான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பின்னர், நகரத்தின் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்புச் சிகிச்சைக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டார். அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

மேலும், அவருக்கு நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அவர் தனது மகனுடன் ஸ்ரீநகருக்கு வந்திருந்தார், இருவரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் எதிர்மறையாக வந்தது. தற்போது அவருடைய மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜம்மு-காஷ்மீரில் செவ்வாயன்று புதிதாக 359 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : Maharashtra dies COVID-19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT