இந்தியா

நந்திகிராம் தாக்குதல் விடியோ என்னிடம் உள்ளது: மம்தா

31st Mar 2021 05:03 PM

ADVERTISEMENT

நந்திகிராமில் என்னைத் தாக்கியவர்களின் விடியோ என்னிடம் உள்ளது என்றும், அதனை தேர்தலுக்குப் பிறகு வெளியிடுவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரம் என்பதால் அமைதியாக இருப்பதாகவும், தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த பின்னர் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, கோயிலுக்கு சென்று திரும்பும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னைத் தள்ளிவிட்டதாக மம்தா புகார் தெரிவித்தார்.

இதில் படுகாயமடைந்து மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது காலில் கட்டுடன் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் என்னைத் தாக்கியவர்களின் விடியோ ஆதாரம் இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

கோஹாத் பகுதியில் பேரணி மேற்கொண்டு பேசிய அவர், ''எந்த தைரியத்தில் என் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். தேர்தல் நேரம் என்பதால் அமைதியாக உள்ளேன். தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

எந்தத் துரோகி அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். தில்லி, பிகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் என எங்கு சென்றாலும் மேற்கு வங்கத்திற்கு அழைத்து வருவேன்.

தனிப் பெண்ணுக்கு எதிராக போட்டியிட பாஜக அச்சம்கொள்கிறது. இதனால் இடதுசாரி கட்சியிலிருந்து காசுக்கு வேட்பாளர்களை வாங்கி தேர்தலில் பாஜக போட்டியிட வைக்கிறது'' என்று கூறினார்.

Tags : மேற்கு வங்கம் Mamata Banerjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT