இந்தியா

ஹெச்.டி. தேவெகௌடாவுக்கு கரோனா: நலம் விசாரித்தார் பிரதமர்

31st Mar 2021 04:14 PM

ADVERTISEMENT


முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகௌடா மற்றும் அவரது மனைவிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"எனது மனைவிக்கும் எனக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் தனிமைப்படுத்திக்கொண்டோம். கடந்த சில நாள்களில் எங்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகளும், நலம் விரும்பிகளும் பதற்றம் கொள்ள வேண்டாம்."

இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அவரைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

ADVERTISEMENT

இதுபற்றி பிரதமர் மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"முன்னாள் பிரதமர் ஹெச்.டி தேவெகௌடாவிடம் பேசினேன். அவரது மனைவி மற்றும் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."

இதைத் தொடர்ந்து, தேவெகௌடா சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT