இந்தியா

ம.பி.: வாந்தி எடுக்க பேருந்து ஜன்னலிலிருந்து தலையை நீட்டிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

31st Mar 2021 12:41 PM

ADVERTISEMENT


இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில், பேருந்தில் சென்று கொண்டிருந்த சிறுமி, வாந்தி எடுக்க ஜன்னலிலிருந்து வெளியே தலையை நீட்டியபோது, எதிரே வந்த டிரக் மோதியதில் தலை துண்டானது.

இது குறித்து காவல்துறை அதிகாரி சீமா அலாவா கூறுகையில், கந்த்வாவிலிருந்து இந்தூரில் நடைபெறும் திருமண விழாவுக்காக, தமன்னா என்ற 13 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அவருக்கு வாந்தி வந்துள்ளது, உடனடியாக ஜன்னல் வழியாக தலையை நீட்டி தமன்னா வாந்தி எடுக்க முயன்றபோது, எதிரே வேகமாக வந்த டிரக் மோதியதில், அவரது தலை துண்டானது என்று தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஒரு வினாடியில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எங்குப் பார்த்தாலும் ரத்தம், சிறுமியின் அருகில் அமர்ந்திருந்த தாய் அப்போது பயங்கரமாகக் கத்தினார். அப்போதுதான் என்ன நடந்தது என்றே புரிந்தது. ஒரு வினாடியில் எல்லாம் முடிந்துவிட்டது என்று மிரட்சியிலிருந்து மீளாமல் சம்பவத்தை விளக்கினார்.
 

ADVERTISEMENT

Tags : accident MP madhya pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT