இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 39,544 பேருக்கு கரோனா

31st Mar 2021 08:38 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 39,544 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 39,544 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,12,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 23,600 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 227 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 24,00,727 பேர் குணமடைந்துள்ளனர். 54,649 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT

இன்றைய நிலவரப்படி 3,56,243 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் மட்டும் புதிதாக 5,394 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3,130 பேர் குணமடைந்துள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,14,714 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,50,660 பேர் குணமடைந்துள்ளனர், 11,686 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இன்னும் 51,411 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT