இந்தியா

என் பெயர் நரேந்திர மோடி இல்லை: அசாமில் ராகுல் பேச்சு

31st Mar 2021 05:00 PM

ADVERTISEMENT


அசாம் மாநிலம் சைகான் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நான் பிரதமர் நரேந்திர மோடியைப் போல 24 மணி நேரமும் பொய் சொல்பவர் அல்ல என்று கூறினார்.

காம்ரூப் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, உண்மை என்னவென்று தெரிய வேண்டுமென்றால் நான் பேசுவதைக் கேளுங்கள். நான் இங்கு பொய் சொல்ல வரவில்லை. எனது பெயர் நரேந்திர மோடியும் இல்லை.

அசாம் பற்றியும், விவசாயிகள் அல்லது எந்த விவகாரம் குறித்தும் பொய்யான விவரங்களைக் கேட்க நீங்கள் விரும்பினால் தொலைக்காட்சியைப் பாருங்கள். அதில் பிரதமர் மோடி 24 மணி நேரமும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை உண்மை தெரிய வேண்டுமென்றால் நான் சொல்வதைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
 

Tags : rahul modi pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT