இந்தியா

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்: பஞ்சாப்

31st Mar 2021 06:42 PM

ADVERTISEMENT

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்துகொள்வதற்கான திட்டத்திற்கு பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் அரசுப் பேருந்துகளில் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் சட்டத்திற்கு இன்று பஞ்சாப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் அமரீந்தர் சிங் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, ''அமைச்சரவையில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் மற்றும் மாணவிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும்'' என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : punjab CM Captain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT