இந்தியா

தில்லியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதல்: இருவர் பலி, 2 பேர் காயம்

31st Mar 2021 12:21 PM

ADVERTISEMENT

 

தேசிய தலைநகர் தில்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள நடைபாதையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். 

விபத்து நடைபெற்ற இடத்திலிருந்தவர் கூறுகையில், 

இன்று காலை 6 மணியளவில் ஷஹ்தாராவிலிருந்து காஷ்மீர் கேட் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க நடைபாதையின் மீது லாரி ஏறியுள்ளது. 

ADVERTISEMENT

இந்த விபத்தில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பிடிபட்டார் என்று தில்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 
 

Tags : தில்லி Delhi footpath accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT