இந்தியா

தில்லியில் புதிதாக 1,819 பேருக்கு கரோனா

31st Mar 2021 09:46 PM

ADVERTISEMENT


தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,819 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,62,430-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், புதிதாக 399 பேர் குணமடைந்ததால், இதுவரை  மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 6,42,565-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக 11 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,027-ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 8,838 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Delhi vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT