இந்தியா

காருக்குள் தீக்குளித்து ஓட்டுநர் பலி: பெங்களூருவில் டாக்ஸி சேவை பாதிப்பு

31st Mar 2021 04:09 PM

ADVERTISEMENT


கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கார் ஓட்டுநர் தீக்குளித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

உரிய விசாரணை நடத்தக்கோரி சக ஓட்டுநர்கள் போரட்டத்தில் ஈடுபட்டதால், விமான நிலையத்தில் டாக்ஸி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களிலும் டாக்ஸி சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தமது காருக்குள் தீக்குளித்து இறந்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி சக ஓட்டுநர்கள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், விமான நிலையத்தில் டாக்ஸி சேவை பாதிக்கப்பட்டது. மேலும், விமானப் பயணிகள் அனைவரும் டாக்ஸி சேவைக்கு பதிலாக பெங்களூரு மெட்ரோ சேவையைப் பயன்படுத்துமாறு விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

கார் ஓட்டுநர் தீக்குளித்து இறந்தது தொடர்பாக காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Taxi services cab drivers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT