இந்தியா

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 2 தொகுதிகளில் 144 தடை

31st Mar 2021 07:25 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் நாளை (ஏப்ரல் 1)  2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பதட்டமான இரண்டு தொகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டத் தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.1) நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவிற்காக 1,937 பகுதிகளில் 3,210 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 22.82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதனையொட்டி தம்லுக், நந்திகிராம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பதட்டமான வாக்குச்சாவடியுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் பேரணியும் மேற்கொள்ளவுள்ளனர். இதனை கிழக்கு மிட்னாபூர் ஆட்சியர் ஸ்மிதா பாண்டே உறுதி செய்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT