இந்தியா

ஸ்மார்ட்ஃபோனை விற்கும் போது மறக்காமல் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்

31st Mar 2021 04:13 PM

ADVERTISEMENT


ஒருவர் பயன்படுத்திய ஸ்மார்ட்ஃபோனை விற்றுவிட்டு புதிய செல்லிடப்பேசியை வாங்க திட்டமிடும்போது நிச்சயம் ஒரு சில விஷயங்களை மறக்காமல் செய்ய வேண்டியது அவசியம்.

1. செல்லிடப்பேசியில் இருக்கும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் சிம் அல்லது மெமரிகாட் அல்லது ஜிமெயிலில் பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள். இதைப் பெரும்பாலானோர் செய்ய மறக்க மாட்டார்கள்.

2. பொதுவாக அனைவரும் செல்லிடப்பேசி எண்களை பேக்கப் எடுத்துக் கொள்ளுவார்கள். ஆனால், மெசேஜ்களை பேக்கப் எடுக்க மறந்துவிடுவார்கள். பிறகு முக்கியமான தகவல்கள் கிடைக்காமல் அவதிப்படுவதும் உண்டு. எனவே முக்கியமான மெசேஜ்களையும் பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. செல்லிடப்பேசியில் அனைத்து விதமான சேவைகளிலிருந்தும் லாக்அவுட் செய்து வெளியேறிவிடுங்கள். செல்லிடப்பேசியில் ஜிமெயில், ஃபேஸ்புக் என எதிலும் உள்நுழைந்துவிட்டு, ஃபேக்டரி ரீசெட் செய்யக் கூடாது.

ADVERTISEMENT

4. மறந்தும் கூட செல்லிடப்பேசியில் உங்கள் மெமரி கார்டை விட்டுவிடாதீர்கள். அதாவது, செல்லிடப்பேசியில் பேக்கப் எடுப்பதற்காக எஸ்டிகார்டை இணைத்துவிட்டு, அதில் அனைத்துத் தகவல்களும் பாதுகாக்கப்பட்டதும், அதனை உறுதி செய்து கொள்ளுங்கள். பிறகு மறக்காமல் எஸ்டி கார்டை எடுத்து பத்திரப்படுத்துங்கள்.

5. செல்லிடப்பேசியை கொடுக்கும் போது அதிலிருக்கும் சிம்கார்டுகளை எடுக்க நிச்சயம் மறக்க மாட்டீர்கள் என்று தெரியும்.

6. வாட்ஸ்அப் செயலியில் மிக முக்கியமான பேச்சுக்களை வாட்ஸ்அப் செட்டிங்கில் கூகுள் வாய்ப்பைப் பயன்படுத்தி பேக்கப் எடுத்துக் கொள்ளலாம். அப்போது குறிப்பிட்ட சில கோப்புகளையும் பேக்கப் எடுக்க வேண்டுமா என்ற வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு புதிய செல்லிடப்பேசியில் வாட்ஸ்அப்பை பதிவேற்றம் செய்யும் போது, அதில் உங்கள் சாட்டுகளை மீள்பதிவு செய்து கொள்ளலாம்.

7. ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் ஃபேக்டரி ரீசெட் செய்வதற்கு முன்பு, என்கிரிப்டட் ஆகியிருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், செல்லிடப்பேசி செட்டிங்ஸில் சென்று என்கிரிப்ஷன் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், செல்லிடப்பேசியிலிருக்கும் தகவல்களை பிறர் திருடுவதற்கு வாய்ப்பு இருக்காது. பழைய செல்லிடப்பேசிகளில் என்கிரிப்டட் ஆப்ஷனை பயனாளர்கள்தான் இயக்க முடியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8. தேவையற்ற எதை செயலியும் உங்கள் செல்லிடப்பேசியில் வைக்காதீர்கள். சேமிப்புப் பெட்டகத்தின் சேமிக்கும் திறனும் அதிகமாக இருக்கும். அப்போதுதான் அது புதிது போல இருக்கும். அதிக விலையும் கிடைக்கும்.

9. இறுதியாக, ஃபேக்டரி ரீஸெட் செய்ய வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் சரியாக செய்து முடித்துவீட்டீர்கள் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, ஃபேக்டரி ரீசெட் செய்யுங்கள்.

10. ஆரம்பித்த இடத்திலிருந்து தொடங்குங்கள். அதாவது புதிய செல்லிடப்பேசி வாங்கும் போது வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அதனுடன் இருந்த ஆக்ஸஸரீஸ் பொருள்களுடன் உங்கள் செல்லிடப்பேசியை நன்கு துடைத்து வைத்துவிடுங்கள். 
 

Tags : smartphone cellphone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT