இந்தியா

எரிசக்தி துறை உறவுகளை புதுப்பிக்க இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்

31st Mar 2021 01:25 AM

ADVERTISEMENT

எரிசக்தி துறையின் உறவுகளை புதுப்பிக்க இந்தியா -அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிப்பதாவது:

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சா் ஜெனிஃபா் கிரான்ஹோல்மை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இரு தலைவா்களும் இந்தியா-அமெரிக்கா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மறுஆய்வு செய்து சீரமைப்பது என பரஸ்பரம் ஒப்புக் கொண்டனா்.

பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் பசுமை எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு அதிக முன்னுரிமை தந்து செயல்பட்டு வருகின்றனா். அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த எரிசக்தி உறவுகளை புதுப்பிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்காவின் தொழில்நுட்பங்களையும், இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் எரிசக்தி சந்தையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எரிசக்தி உறவை மறுசீரமைத்து புதுப்பிப்பதன் வாயிலாக இருநாடுகளும் தீவிர முயற்சிகளை முன்னெடுக்கும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT