இந்தியா

காஷ்மீர்: 2021-ல் பயங்கரவாதத் தாக்குதல், ஊடுருவல் குறைவு

29th Mar 2021 03:55 PM

ADVERTISEMENT


புது தில்லி: ஜம்மு காஷ்மீரில், 2021-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஊடுருவல் 25 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் 2020-ஆம் ஆண்டில் 167 காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதத்தில் இணைந்த நிலையில், இதுவரை 20 பேர் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்.

மத்திய பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை ஜம்மு - காஷ்மீரில் 43 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், இதே காலக்கட்டத்தில் 2020-ல் 58 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 6 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 9 இளைஞர்கள் மாயமான நிலையில், அவர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் சில நாள்களில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பிவிட்டதாகவும், இந்த ஆண்டில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 20 இளைஞர்களில் 8 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT