இந்தியா

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் தாக்குதல்

29th Mar 2021 01:47 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானின் காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் புதுப்பிக்கப்பட்டு வரும் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

நகரின் புராணா கிலா பகுதியில் சனிக்கிழமை 10 முதல் 15 பேர் சுமார் 7.30 மணியளவில் கோயிலில் நுழைந்து, கோயிலின் பிரதான கதவு, மேல்தளத்தில் உள்ள மற்றொரு கதவு மற்றும் படிக்கட்டுகள் சேதப்படுத்தியுள்ளனர்.  

கோவிலினுள் தெய்வச் சிலைகள் மற்றும் வேறு எந்த வழிபாட்டுப் பொருள்களும் இல்லை. கோயிலின் புனிதத்தன்மைக்கு எதிராகச் சேதம் விளைவித்தவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

கடந்த ஆண்டு டிசம்பரில், கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் ஒரு கும்பலால் இந்து ஆலயம் தாக்கப்பட்டுச் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT