இந்தியா

முதல்கட்டத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் பிற்பகல் 3 மணிநிலவரப்படி 55.27% வாக்குகள் பதிவு

27th Mar 2021 04:29 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தின் முதல்கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணிநிலவரப்படி 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் புருலியா, ஜாா்கிராம், பாங்குரா, கிழக்கு மிதுனபுரி, மேற்கு மிதுனபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
அதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணிநிலவரப்படி 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் கட்ட தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தலா 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 
காங்கிரஸ்-இடதுசாரி-ஐஎஸ்எஃப் கூட்டணி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தோ்தலுக்காக, 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 36 லட்சம் பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 73.80 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பாதுகாப்பு பணியில் 684 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர மாநில காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். 
இந்தத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் புதிதாக வளா்ந்துள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT