இந்தியா

59 ஆந்திர பல்கலைக்கழக மாணவர்களுக்கு கரோனா

27th Mar 2021 08:56 PM

ADVERTISEMENT

59 ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி சூர்யநாராயணா கூறுகையில், கரோனா தொற்று மாணவர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த 850 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 
அதில் 59 பொறியியல் மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அறிகுறியற்ற நிலையில் கரோனா இருந்தது. கரோனா பாதிப்புக்குள்ளான மாணவர்கள் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர் என்றார். 
ஆந்திர மாநிலத்தில் இன்று 947 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,97,810ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coroanvirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT