இந்தியா

பாஜகவுக்கே வாக்குகள் பதிவாவதாக புகார்: கிழக்கு மிட்னாபூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்

27th Mar 2021 11:05 AM

ADVERTISEMENT

 

மேற்குவங்க மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிழக்கு மிட்னாபூர் தொகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் திரிணமூல் கட்சிக்கு வாக்களித்தாலும் விவிபேட்-டில் பாஜகவுக்கு வாக்களித்ததாகவே காட்டுவதாக புகார் எழுந்தது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாங்கள் வாக்களித்த நிலையில், விவிபேட் கருவியில், பாஜகவுக்கு வாக்களித்ததாகக் காட்டுவதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டியதால், அந்த வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், வாக்குச்சாவடி அதிகாரி, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 7.72% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

30 தொகுதிகளிலும் 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2016 தேர்தலில், இந்த 30 தொகுதிகளில் 27ல் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில், முதல்கட்டமாக 27ஆம் தேதியும், இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
 

Tags : west bengal election bjp voting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT