இந்தியா

அதிகரிக்கும் கரோனா பாதிப்புகள்: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாடத் தடை

27th Mar 2021 11:21 AM

ADVERTISEMENT

அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் ஹோலி பண்டிகையைக் கொண்டாட ஜார்க்கண்ட் மாநில அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநில அரசு ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது.

மேலும் ஷாப்-இ-பாரத், நவராத்திரி,ராம் நவமி, ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகைகளையும் பொதுஇடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus covid19 Jharkhand
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT