இந்தியா

சச்சினைத் தொடர்ந்து முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கரோனா

27th Mar 2021 10:03 PM

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், எனக்கு லேசான அறிகுறியுடன் கூடிய கரோனா தொற்று உறுதியானது. நான், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதோடு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொண்டேன். 
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாகவே விரைவில் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Yusuf Pathan coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT