இந்தியா

குடியரசு தலைவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை

27th Mar 2021 12:59 PM

ADVERTISEMENT

நெஞ்சு வலி காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை எய்ம்எஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குடியரசுத் தலைவர் நலமாக உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக குடியரசுத் தலைவரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன்காரணமாக அவர் விரைவில் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

Tags : Delhi Ramnath govind
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT