இந்தியா

சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மூவர் கைது

27th Mar 2021 02:57 PM

ADVERTISEMENT

புது தில்லி: சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் திருடிய ஒரு பெண் உள்பட மூன்று பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், சிபிஐ அதிகாரிகள் என்று கூறும் போலி அடையாள அட்டை வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம், இந்திய ரூபாய், பல லட்சம் மதிப்புள்ள நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், 3852 அமெரிக்க டாலர்கள், 400 இங்கிலாந்து பவுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து, அதில் சிபிஐ அதிகாரிகளாக நடிப்பதைப் போல தாங்களும் சிபிஐ அதிகாரிகள் போல நடித்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : cbi Doctor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT