இந்தியா

தில்லியில் புதிதாக 1,558 பேருக்கு கரோனா

27th Mar 2021 06:40 PM

ADVERTISEMENT

தலைநகர் தில்லியில் புதிதாக 1,558 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், தில்லியில் இன்று மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 91,703 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 59648 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 32055 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
அதில், புதிதாக 1,558 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,55,834ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் இன்று 10 உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,997-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 974 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,38,212-ஆக உயா்ந்துள்ளது. 
தற்போது 6,625 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 3,708 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 4,410 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 1,506 பகுதிகள் உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT