இந்தியா

பொதுமக்களுக்கு தில்லி காவல்துறையின் வேண்டுகோள்

27th Mar 2021 04:59 PM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஹோலிப் பண்டிகையை மக்கள் வீட்டுக்குள்ளேயே கொண்டாடிக் கொள்ளவும், பொதுவிடங்களில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் தில்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுவிடங்களில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஹோலி மற்றும் நவராத்திரி பண்டிகைகளை பொதுவிடங்களில் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்றுமாறு தில்லி முதன்மைச் செயலாளர் விஜய் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

அதுபோல, தில்லியில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு மைதானங்கள், பூங்காக்கள், சந்தைப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் ஏராளமான மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான், தில்லி மக்களுக்கு, காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் ஹோலிப் பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடுங்கள். தவிர்த்து, வெளியிடங்களில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT