இந்தியா

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

27th Mar 2021 06:15 PM

ADVERTISEMENT

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. 
ராஜஸ்தானில் ஏப்ரல் 17-ம் தேதி சுஜன்கார், ராஜ்சமந்த், சஹாரா ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. 
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் மார்ச் 30. மார்ச் 31 அன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 3 ஆகும். ஏற்கெனவே 3 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 
இதன்படி மனோஜ் குமார் சுஜன்கார் தொகுதியிலும், தன்சுக் போகாரா ராஜ்சமந்த் தொகுதியிலும், காயத்ரி தேவி சஹாரா தொகுதியிலும் போட்டியிடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : rajasthan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT