இந்தியா

மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பாதுகாப்பு வீரர்கள் காயம்

27th Mar 2021 10:44 AM

ADVERTISEMENT


மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 

294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் புருலியா, ஜாா்கிராம், பாங்குரா, கிழக்கு மிதுனபுரி, மேற்கு மிதுனபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பகபன்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆர்கோலி, சத்சத்மல் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் புர்பா மிதுனபுரி மாவட்டம் வன்முறையைக் கண்டது. 

இந்த வன்முறை சம்பவத்தில் படாஷ்பூர் காவல் நிலைய அலுவலர் தீபக் குமார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் என இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமாக காணப்படுகிறது. காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக கொல்கத்தா கொண்டுச்செல்லப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பயங்கரவாதத்தை பரப்புவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளார். 

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 30 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தலா 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-இடதுசாரி-ஐஎஸ்எஃப் கூட்டணி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

முதல் கட்ட தோ்தலுக்காக, 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 36 லட்சம் பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 73.80 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பாதுகாப்பு பணியில் 684 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர மாநில காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்தத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் புதிதாக வளா்ந்துள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Tags : 2 security personnel injured Purba Medinipur Bengal first phase polls
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT