இந்தியா

அசாம், மேற்கு வங்கத்தில் முதல்கட்டத் தேர்தல்: 11 மணி வரை 24% வாக்குகள் பதிவு

27th Mar 2021 11:50 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி வரை 24 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 30 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 24.61% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதேபோல் அசாமில் 123 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி 24.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவையொட்டி மத்திய காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags : west bengal Assam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT