இந்தியா

அசாம், மேற்குவங்க முதல்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

27th Mar 2021 05:56 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 30 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மாலை 5 நிலவரப்படி மேற்குவங்கத்தில் 77.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதேபோல் அசாமில் 123 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி நிலவரப்படி 71.62% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

Tags : West bengal Assam Elections 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT