இந்தியா

மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்து: 3 விமானிகள் காயம்

27th Mar 2021 08:24 PM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் சிறிய ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 3 விமானிகள் காயமடைந்தனர். 
மத்திய பிரதேச மாநிலம், போபாலிருந்து குணாவை நோக்கி சிறிய ரக பயிற்சி விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானம் திடீரென பட்வாய் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விபத்துக்குள்ளானது. 
இந்த சம்பவத்தில் விமாத்தில் பயணித்த 3 விமானிகள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்டுகப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக காந்தி நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags : madhya pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT