இந்தியா

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59,118 பேருக்கு தொற்று

26th Mar 2021 10:49 AM

ADVERTISEMENT


இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 5 மாதங்களுக்கு பிறகு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 59,118  பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 46 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் மேலும் கூறியிருப்பதாவது:

ஒரே நாளில் கொரோனாவால் 257 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4 லட்சத்து 21 ஆயிரத்து 066 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 637 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

வியாழக்கிழமை மாலை வரையிலும் 5 கோடியே 55 லட்சத்து 4 ஆயிரத்து 440 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, மார்ச் 25 வரை 23,86,04,638 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, அவற்றில் 11,00,756 சோதனைகள் நேற்று செய்யப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை,  மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு, மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு தினசரி புதிய கரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், 81.63 சதவீதம் புதிய கரோனா தொற்று வழக்குகளில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT